சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பிரான்ஸ் vs பராகுவே மோதல் பரபரப்பும் சர்ச்சையும் நிறைந்த போட்டியாக மாறியது. கடுமையான உடல் மோதல்கள் வீரர்களுக்கிடையிலான தள்ளுமுள்ளு மற்றும் நடுவரின் முடிவுகள் குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு மத்தியில் 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் காலிறுதிக்கு முன்னேறியது.போட்டி முழுவதும் பராகுவே வீரர்கள் ஆவேசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் கடுமையாக விமர்சித்தனர். பல முறை பிரான்ஸ் வீரர்கள் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதிலும் பராகுவே அணிக்கு ஒரு மஞ்சள் அட்டையும் வழங்கப்படாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

போட்டியின் திருப்புமுனை 70 வது நிமிடத்தில் வந்தது. பிரான்ஸ் வீரர் டெசிரே டூயே மீது செய்யப்பட்ட தவறுக்கு VAR பரிசீலனைக்குப் பிறகு பெனால்டி வழங்கப்பட்டது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய கைலியன் எம்பாப்பே வெற்றிக் கோலை அடித்து. இந்த உலகக் கோப்பையில் தனது 7வது கோலை பதிவு செய்தார்.பெனால்டி எடுக்கப்படுவதற்கு முன்பும் பராகுவே வீரர்கள் நடுவரைச் சூழ்ந்து தாமதப்படுத்த முயன்றதாகவும் பெனால்டி புள்ளியை சேதப்படுத்த முயற்சி செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இறுதிச் சத்தத்திற்குப் பிறகும் இரு அணிகளின் வீரர்களுக்கிடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பிரான்ஸ் பயிற்சியாளர் டிடியே டெஷாம்ப் போட்டியின் போது எதிரணி தரப்பிலிருந்து தேவையற்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்தார். அதேவேளை முன்னாள் வீரர்கள் பலரும் பராகுவே அணியின் அணுகுமுறையை விளையாட்டு ஒழுக்கத்திற்கு எதிரானது என்று விமர்சித்தனர்.இந்த வெற்றியின் மூலம் பிரான்ஸ் அணி காலிறுதியில் மொரோக்கோவை எதிர்கொள்ள தகுதி பெற்றுள்ளது. சாம்பியன் பட்டத்தை மீண்டும் கைப்பற்றும் கனவுடன் பிரான்ஸ் தனது பயணத்தை தொடர்கிறது.

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்