டெசிரே டூவே பிரான்ஸ் அணிக்காக விளையாடுகிறார். அதேவேளை குவெலா டூவே ஐவரி கோஸ்ட் அணியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இருவரும் தங்கள் கிளப் வாழ்க்கையில் வெவ்வேறு பாதையில் முன்னேறியுள்ளனர்.சில சூழ்நிலைகளில் இரு அணிகளும் போட்டியில் சந்தித்தால் சகோதரர்கள் நேருக்கு நேர் மோதும் அபாயமும் உருவாகியுள்ளது. குறிப்பாக குழு நிலை முடிவுகளின் அடிப்படையில் இரு அணிகளும் கடைசி 32 சுற்றில் சந்திக்கலாம் என கூறப்படுகிறது.
அதேபோல் உலக கால்பந்தில் இதுபோன்ற சகோதரர் மோதல்கள் அரிதாகவே இடம்பெற்றுள்ளன. முன்னதாக ஜெர்மனி (Germany) வீரர் ஜெரோம் போடேங் மற்றும் கானா (Ghana) வீரர் கெவின் பிரின்ஸ் போடேங் ஆகியோர் 2010 உலகக் கோப்பையில் ஒருவருக்கு ஒருவர் எதிராக விளையாடினர்.மேலும் ஸ்பெயின் (Spain) அணியில் நிக்கோ வில்லியம்ஸ் மற்றும் கானா (Ghana) அணியில் இனாக்கி வில்லியம்ஸ் ஆகிய சகோதரர்களும் வெவ்வேறு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
அதேபோல் ஆஸ்திரேலியா (Australia) வீரர் ஹாரி சுட்டர் மற்றும் ஸ்காட்லாந்து (Scotland) வீரர் ஜான் சுட்டர் ஆகியோர் உலகக் கோப்பையில் வெவ்வேறு அணிகளில் இடம்பெற்றுள்ளனர்.இதற்கிடையில் நெதர்லாந்து (Netherlands) மற்றும் கானா அணிகளிலும் சகோதரர்கள் மற்றும் அரை சகோதரர்கள் விளையாடும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.இந்த உலகக் கோப்பை சகோதரர்கள் கதைகள் போட்டியை மட்டுமல்லாமல் குடும்ப உறவுகளின் உணர்வையும் உலகளவில் பேசுபொருளாக்கியுள்ளது.

































