இந்த சம்பவம் பள்ளியின் கல்வியாண்டு நிறைவு கொண்டாட்டத்தின் போது நடைபெற்றது அப்போது லேண்ட் ரோவர் கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளி வளாகத்துக்குள் நுழைந்து பலரை மோதியது.
இதில் நூரியா சஜ்ஜாத் மற்றும் செலீனா லாவ் என்ற இரண்டு சிறுமிகள் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்தனர். ஆரம்பத்தில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்படவில்லை காரணம் ஓட்டுநர் திடீர் மயக்கம் (எபிலெப்டிக் சீசர்) ஏற்பட்டதாக கூறப்பட்டது.
ஆனால் பின்னர் புதிய ஆதாரங்கள் கிடைத்ததால் விசாரணை மீண்டும் தொடங்கப்பட்டு தற்போது இரண்டு மரணங்களுக்கும் மற்றும் பலருக்கு தீவிர காயம் ஏற்படுத்தியதற்கும் மொத்தம் பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குற்றம் சாட்டப்பட்ட பெண் ஜூன் 16 அன்று நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இந்த வழக்கின் ஆரம்ப விசாரணை முறைகள் குறித்து போலீசாரின் செயல்பாடும் தற்போது ஆய்வில் உள்ளது.






























