ஈரானின் மினாப் நகரில் உள்ள பெண்கள் ஆரம்பப் பள்ளி மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமான பெண்கள் மற்றும் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்று பல மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் அதுகுறித்து அமெரிக்க டிரம்ப் நிர்வாகம் இன்னமும் தெளிவான விளக்கமோ பொறுப்பேற்போ வழங்கவில்லை என கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
வெளியிட்ட புதிய விசாரணை அறிக்கையில் சம்பவ இடத்தில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் மற்றும் ஏவுகணை தாக்குதல் முறைகள் அனைத்தும் அமெரிக்க இராணுவ நடவடிக்கையுடன் தொடர்புடையதாகத் தோன்றினாலும் வெள்ளை மாளிகை தொடர்ந்து “விசாரணை நடைபெற்று வருகிறது” என்ற ஒரே பதிலை மட்டுமே வழங்கி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பள்ளி தாக்குதலில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்கள் நீதி கோரி போராடி வரும் நிலையில் சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் ஐ.நா. அதிகாரிகளும் இந்த சம்பவம் தொடர்பாக வெளிப்படையான மற்றும் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். டிரம்ப் முன்னதாக இந்த தாக்குதலுக்கு ஈரானே காரணம் என கூறியிருந்தாலும் பின்னர் வெளியான ஆரம்ப அமெரிக்க விசாரணை தகவல்கள் தாக்குதலுக்கு அமெரிக்கப் படைகள் காரணமாக இருக்கலாம் என்பதை சுட்டிக்காட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.





Leave a Reply