மீண்டும் தாக்குதல் – ஈரான் முழுமையாக அழிக்கப்படும்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் அமெரிக்க இராணுவம் மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராக உள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் இராணுவம் “மிகச் சிறந்த ஆயுதங்களால்” மீண்டும் தாக்குதல் செய்ய ஆயத்தப்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் தேவையானால் ஈரானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
சமீபத்திய மோதல்களுக்கு பிறகு இரு நாடுகளுக்கும் இடையில் தற்காலிக போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தாலும் நிலைமை இன்னும் பதற்றமாகவே உள்ளது. ஈரானின் அணு திட்டம் ஏவுகணை திறன் மற்றும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பான கருத்து வேறுபாடுகள் காரணமாக பேச்சுவார்த்தைகள் சிக்கலில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் மத்திய கிழக்கு பகுதியில் நடக்கும் தாக்குதல்கள் மற்றும் எதிர்தாக்குதல்கள் காரணமாக உலகளாவிய பாதுகாப்பு சூழ்நிலை மீதும் தாக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது. பேச்சுவார்த்தை வெற்றியடையாத பட்சத்தில் மீண்டும் பெரிய அளவிலான போர் வெடிக்கும் வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.





Leave a Reply