உயிரிழந்த இளைஞர் உட்பட சிலர் நேற்று மாலை வவுனியாவிலிருந்து வீரபுரம் பகுதிக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், வீரபுரம் பகுதியைச் சேர்ந்த குழு ஒன்றினால் அவர்கள் மீது திடீரென தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
🔴 காவல்துறை நடவடிக்கை
தாக்குதலில் கடுமையாக காயமடைந்த இளைஞர் உடனடியாக மீட்கப்பட்டு செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
எனினும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞர் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை செட்டிகுளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருவதுடன், மேலதிக விசாரணைகளையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.





























