இரத்தினபுரி–எம்பிலிபிட்டிய பிரதான வீதியில் இன்று (03) இரவு 8.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை தற்காலிக போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். கஹவத்த புராண விகாரையின் வருடாந்த மிஹிந்து மகா பெரஹரா ஊர்வலம் நடைபெறவுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பெரஹரா இரத்தினபுரி–எம்பிலிபிட்டிய பிரதான வீதி வழியாகச் சென்று லிஹினியா சந்தியிலிருந்து திரும்பி கொட்டகெத்தன வீதி ஊடாக மீண்டும் கஹவத்த புராண விகாரையை சென்றடையவுள்ளது. இந்த காலப்பகுதியில் இலகுரக வாகனங்கள் மட்டுமே வீதியின் ஒரு பாதையில் பயணிக்க அனுமதிக்கப்படும் நிலையில் கனரக வாகனங்கள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எம்பிலிபிட்டியவிலிருந்து கொழும்பு நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் கஹவத்த யாயின்ன சந்தி, மனந்தொல, நிவித்திகல மற்றும் திரிவானாகெட்டிய வழியாகவும், இரத்தினபுரியிலிருந்து எம்பிலிபிட்டிய நோக்கி செல்லும் வாகனங்கள் பெல்மதுளை, பலங்கொடை, வெலிகெபொல மற்றும் பல்லேபெத்த வழியாகவும் பயணிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கஹவத்த கடிகாரக் கோபுர வட்டாரத்திலிருந்து ஓபநாயக்க வீதி வழியாக பலங்கொடை ஊடாக எம்பிலிபிட்டிய நோக்கி செல்லும் மாற்று பாதையையும் பயன்படுத்த முடியும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளதுடன் பொதுமக்கள் தங்களது பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.








Leave a Reply