இந்த புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டிருந்த அவகாசம் நேற்று (19) நிறைவடைந்த நிலையில் இன்று முதல் விதிமுறைகள் கடுமையாக அமுல்படுத்தப்படவுள்ளன. வீதி விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் கடுமையான காயங்களை குறைக்கும் நோக்கில் அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தேசிய வீதி பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.
புதிய போக்குவரத்து சட்டம் அமுல்
வாகனங்களில் பயணிக்கும் போது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் ஆசனப் பட்டி (Seat Belt) அணிவதை இன்று முதல் கட்டாயமாக்கியுள்ளதாக தேசிய வீதி பாதுகாப்பு சபை அறிவித்துள்ளது. இதன்படி அனைத்து வாகன சாரதிகளும் மற்றும் முன் ஆசனங்களில் பயணிப்பவர்களும் ஆசனப் பட்டி அணிவது கட்டாயமாகும். மேலும் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் உள்ள அனைத்து பயணிகளும், பின் ஆசனங்களில் அமர்ந்திருப்பவர்களையும் உள்ளடக்கி ஆசனப் பட்டிகளை அணிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


































