இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தாக்கி கொலை செய்ததாக உயிரிழந்தவரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். எனினும் இசைக் கச்சேரி ஒன்றைப் பார்ப்பதற்காக வெளியே சென்றிருந்ததாகவும் இன்று அதிகாலை வீடு திரும்பியபோது மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததைக் கண்டு கயிற்றை அறுத்து உடலை கட்டிலில் கிடத்தியதாகவும் கணவர் தெரிவித்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
திருமணமாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடையவிருந்த நிலையில் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையான கணவர் தன்னை தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக உயிரிழந்த பெண் பலமுறை பலகொல்ல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் கணவர் அடிக்கடி தாக்குவதால் பெற்றோர் வீட்டிற்கு வந்து தங்கியிருந்ததுடன் விவாகரத்து பெறுவதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.































