சில சம்பவங்களில் போதைப்பொருள் அல்லது மயக்கமருந்து கலந்த பானங்கள் வழங்கப்பட்டு குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே அறிமுகமில்லாத நபர்களிடம் தனிப்பட்ட தகவல்கள் புகைப்படங்கள் அல்லது பெறுமதியான பொருட்களை பகிர வேண்டாம் என்றும் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் குறித்து உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
சமூக ஊடக மோசடிகள் பெண்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை
சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்கள் ஊடாக பெண்களை இலக்காகக் கொண்டு இடம்பெறும் நிதி மோசடி பாலியல் சுரண்டல் மற்றும் பல்வேறு குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதாக பொலிஸார் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாட்டின் பல பகுதிகளில் இருந்து கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இணையம் மூலம் பெண்களுடன் நட்புறவு ஏற்படுத்தும் சிலர் பின்னர் திருமண வாக்குறுதி உள்ளிட்ட பல்வேறு ஏமாற்று முறைகளை பயன்படுத்தி பணம் நகைகள் மற்றும் சொத்துக்களை மோசடி செய்வதுடன் பாலியல் துஷ்பிரயோகங்களிலும் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

































