மாத்தளை மாவட்டத்தின் கலேவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேகடபொல பகுதியில் சட்டவிரோத விற்பனைக்காக பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு பாகங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை விமானப்படை புலனாய்வுப் பிரிவு ரித்திகல வனவிலங்கு அலுவலகம் மற்றும் குருநாகல் வனவிலங்கு உதவிப் பணிப்பாளர் அலுவலக அதிகாரிகள் இணைந்து கடந்த 19ஆம் திகதி முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.
விசாரணைகளின் அடிப்படையில் கைப்பற்றப்பட்ட வனவிலங்கு பாகங்களை 300,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய சந்தேகநபர் முயற்சித்துள்ளதாக தெரியவந்துள்ளது. சோதனையின் போது 3 புள்ளிமான் கொம்புகள் 1 கலைமான் கொம்பு 1 சாம்பார் மான் கொம்பு 1 எல்க் மான் கொம்பு சிறுத்தையின் பற்கள் மற்றும் யானைத் தந்தத்தின் ஒரு பகுதி உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு பாகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நபர் மற்றும் அவரிடமிருந்து மீட்கப்பட்ட பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குருநாகல் வனவிலங்கு உதவிப் பணிப்பாளர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பின்னர் தலா 500,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ள சந்தேகநபர் நாளை (22) தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.







Leave a Reply