இதனை நிவர்த்தி செய்வதற்காக துஷ்பிரயோக சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள பன்முகக் கட்டமைப்பு மேலாண்மை சேவை திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. மேலும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் கீழ் இயங்கும் பொலிஸ் பிரிவை சுயாதீன பிரிவாக மாற்றுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளரின் தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாத சிறுவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு அவற்றைப் பெற்றுக்கொடுப்பது மற்றும் சிறுவர் மேல் நீதிமன்றங்களை நிறுவி வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்துவது தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





























