பேராயர் மல்கம் ரஞ்சித் உள்ளிட்ட பலரும் விசாரணைகள் தொடர்பில் நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர் குற்றவாளிகள் எவரும் தப்பிக்க விடப்படக்கூடாது என வலியுறுத்தினார். மேலும் செம்மணி மனித புதைகுழி அகழ்வில் வெளிவரும் எலும்புக்கூடுகள் மற்றும் ஆதாரங்கள் கடந்த கால மனித உரிமை மீறல்களின் சாட்சிகளாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர்,உண்மைகளை வெளிக்கொணரும் நடவடிக்கைகளை வரவேற்பதாகவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் செம்மணி விவகாரங்களில் நீதியை நிலைநாட்ட அரசாங்கம் உறுதியுடன் செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு விசாரணையில் முன்னேற்றம்
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஓரளவு முன்னேற்றகரமான முறையில் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தார். இன்று (21) மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் முந்தைய ஆட்சிக்காலங்களில் தாக்குதல் தொடர்பான உண்மைகள் முழுமையாக வெளிக்கொணரப்படவில்லை என்றும் தற்போதைய விசாரணைகள் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.































