Tag: Batticaloa News
மட்டக்களப்பு வாள்வெட்டு, ஏறாவூர் காவல்துறை பிரிவிற்குட்பட்ட மைலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற வருடாந்த உற்சவத்தின் போது வழங்கப்பட்ட அன்னதானத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட தகராறு வாள்வெட்டு தாக்குதலாக மாறியதில் பெண்கள் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர் இன்று (29) பிற்பகல் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் அன்னதான உணவின் தரம் குறித்து இளைஞர் ஒருவர் குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் ஏழு பேர் கொண்ட குழுவொன்று வாள்களுடன் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. சம்பவத்தின் போது […]
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் கைதிகள் கூண்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கைதி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் இன்று (20) பிற்பகல் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையின் தகவலின்படி குறித்த நபர் மட்டக்களப்பில் இடம்பெற்ற மூன்று திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். எனினும் வழக்கு விசாரணைகளுக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததால் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்ததைத் தொடர்ந்து கடந்த 13ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் அவர் […]
அம்பாறை – மருதமுனை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இன்று (16) காலை இடம்பெற்ற துயரமான வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 36 வயதுடைய இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஆரம்பகட்ட விசாரணைகளின்படி வேலைக்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது வீதியில் ஊற்றப்பட்டிருந்த நீரால் சாலை வழுக்கும் நிலையில் இருந்ததால் அவர் கட்டுப்பாட்டை இழந்து சறுக்கி விழுந்துள்ளார். அதனைத் தொடர்ந்து எதிர்திசையில் அதிவேகமாக வந்த பேருந்தின் சக்கரத்தில் சிக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக […]
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஓரளவு முன்னேற்றகரமான முறையில் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தார். இன்று (21) மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் முந்தைய ஆட்சிக்காலங்களில் தாக்குதல் தொடர்பான உண்மைகள் முழுமையாக வெளிக்கொணரப்படவில்லை என்றும் தற்போதைய விசாரணைகள் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினார். பேராயர் மல்கம் ரஞ்சித் உள்ளிட்ட பலரும் விசாரணைகள் தொடர்பில் நம்பிக்கை […]
மட்டக்களப்பு காத்தான்குடி கடற்கரை வீதியில் அமைந்துள்ள புடவைக் கடையொன்றில் இன்று சனிக்கிழமை (20) பகல் ஏற்பட்ட தீ விபத்தில் கடை முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது. கடை உரிமையாளர் பகல் உணவுக்காக கடையை மூடிவிட்டு தனது வீட்டிற்குச் சென்றிருந்த வேளையில் இந்த தீ பரவல் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. தீ வேகமாக பரவியதால் கடையிலிருந்த புடவைகள் மற்றும் ஏனைய பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ளன. சம்பவம் குறித்து தகவலறிந்த பிரதேச மக்கள் மற்றும் தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் […]
மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் குளியலறையில் அமைந்திருந்த தண்ணீர்த் தொட்டியில் தவறி விழுந்த 11 வயது சிறுமி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். ஏறாவூர் 5ஆம் பிரிவு நீதிமன்ற வீதியைச் சேர்ந்த சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆரம்ப தகவல்களின் படி சிறுமியின் தாயார் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக நாட்டிற்கு வெளியே சென்றிருந்த நிலையில், சிறுமி தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார். சம்பவம் இடம்பெற்ற நாளில் சிறுமியும் அவரது சகோதரனும் மட்டும் […]
துறைநீலாவணை ஆலய தாக்குதல் – தலைவர் உட்பட 7 பேர் கைது மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துறைநீலாவணை பகுதியில் உள்ள உச்சிமா காளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் போது ஏற்பட்ட கருத்து முரண்பாட்டைத் தொடர்ந்து இரண்டு இளைஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலர் மேற்கொண்டதாக கூறப்படும் இந்தக் காட்டுமிராண்டித் தாக்குதல் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி […]