எனினும் வழக்கு விசாரணைகளுக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததால் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்ததைத் தொடர்ந்து கடந்த 13ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். பின்னர் கடந்த 15ஆம் திகதி மட்டக்களப்பு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை இன்று வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இன்று காலை சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட அவர் வழக்கு விசாரணைக்குப் பின்னர் எதிர்வரும் ஆகஸ்ட் 3ஆம் திகதி வரை மேலும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதைத் தொடர்ந்து மீண்டும் கைதிகள் கூண்டில் அடைக்கப்பட்டார். இதன் பின்னர் பிற்பகல் சுமார் 3.00 மணியளவில் கைதிகள் கூண்டிலுள்ள மலசலகூடத்தில் அவர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உடனடியாக நீதிமன்ற அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் அவரை மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர். குறித்த நபர் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை தையிட்டி பகுதியைச் சேர்ந்தவர் என்றும் அவருக்கு எதிராக மட்டக்களப்பில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்கள் தொடர்பான மூன்று வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.




























