சம்பவம் இடம்பெற்ற நாளில் சிறுமியும் அவரது சகோதரனும் மட்டும் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டிற்கு திரும்பிய தந்தை குளியலறையில் சுமார் இரண்டரை அடி உயரமுள்ள தண்ணீர்த் தொட்டிக்குள் சிறுமி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோதிலும் சிறுமி உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வீடொன்றின் குளியலறையில் இருந்து 11 வயது சிறுமி சடலமாக மீட்பு
மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் குளியலறையில் அமைந்திருந்த தண்ணீர்த் தொட்டியில் தவறி விழுந்த 11 வயது சிறுமி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். ஏறாவூர் 5ஆம் பிரிவு நீதிமன்ற வீதியைச் சேர்ந்த சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆரம்ப தகவல்களின் படி சிறுமியின் தாயார் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக நாட்டிற்கு வெளியே சென்றிருந்த நிலையில், சிறுமி தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார்.































