பின்னர் ஏழு பேர் கொண்ட குழுவொன்று வாள்களுடன் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. சம்பவத்தின் போது பொதுமக்கள் எதிர்த்து நின்று தாக்குதலாளிகளில் ஒருவரை மடக்கிப்பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த நிலையில் மற்றவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். காயமடைந்த நால்வரும் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தப்பியோடிய சந்தேகநபர்களைக் கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளும் தொடர்கின்றன.




























