ரயில் இயந்திரங்களின் பற்றாக்குறை காரணமாக முழுமையான சேவைகளை மீள ஆரம்பிப்பதில் சிரமம் இருப்பதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்ததுடன்,புதிய இயந்திரங்களை கொள்வனவு செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கூறியது. மேலும் சரக்கு ரயில் சேவையை காங்கேசன்துறை வரை நீடித்தல் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் பன்முகப் போக்குவரத்து மையங்களை அமைத்தல் பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் மற்றும் பயன்படுத்தப்படாத காணிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட விடயங்களும் விரிவாக ஆராயப்பட்டன. இதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகள் உறுதியளித்தனர்.
யாழ் – கொழும்பு ரயில் சேவைகளை அதிகரிக்க நடவடிக்கை
யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு இடையிலான ரயில் சேவைகளை அதிகரித்தல், நேர அட்டவணைகளை மீளமைத்தல் மற்றும் ரயில்வே உட்கட்டமைப்புப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. வடக்கு ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் அமைச்சர் இ.சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ரயில் சேவைகளை அதிகரிப்பதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.































