யாழ் – கொழும்பு ரயில் சேவைகளை அதிகரிக்க நடவடிக்கை
யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு இடையிலான ரயில் சேவைகளை அதிகரித்தல், நேர அட்டவணைகளை மீளமைத்தல் மற்றும் ரயில்வே உட்கட்டமைப்புப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. வடக்கு ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் அமைச்சர் இ.சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ரயில் சேவைகளை அதிகரிப்பதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. ரயில் இயந்திரங்களின் பற்றாக்குறை காரணமாக முழுமையான சேவைகளை மீள ஆரம்பிப்பதில் சிரமம் இருப்பதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்ததுடன்,புதிய இயந்திரங்களை கொள்வனவு செய்ய […]
