ஜெர்மனி அரசு தனது உள்நாட்டு எல்லை கண்காணிப்பை மேலும் கடுமையாக்கியுள்ள நிலையில் தற்போது சுமார் 14,000 கூட்டாட்சி போலீஸ் அதிகாரிகள் எல்லைப் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இது அந்நாட்டின் மொத்த கூட்டாட்சி போலீஸ் படையின் கால்பகுதியை விட அதிகமாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரியா போலந்து, பிரான்ஸ், செக் குடியரசு உள்ளிட்ட பல எல்லைப்பகுதிகளில் சாலை ரயில் மற்றும் நதிப் போக்குவரத்து கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதனால் ரயில் நிலையங்கள் விமான நிலையங்கள் மற்றும் விசாரணைப் பிரிவுகளில் பணியாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக போலீஸ் சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
மேலும் சரக்கு வாகன சோதனைகள் அதிகரித்ததால் போக்குவரத்து தாமதங்களும் வணிகச் செலவுகளும் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. குடியேற்ற கட்டுப்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் தொடரப்படுவதாக ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது.































