தொடர்ச்சியான இரண்டு சம்பவங்களால் ஏற்பட்ட தாமதம்
Chartres நகரைத் தாண்டிய பகுதியில் தண்டவாளத்தில் இருந்த தடையை ரயில் முதலில் மோதியது. இதையடுத்து Eure-et-Loir பகுதியில் உள்ள Jouy அருகே ரயில் சுமார் நான்கு மணி நேரம் நிறுத்தப்பட்டது. அதிகாலை 3 மணியளவில் மீண்டும் புறப்பட்ட ரயில், Yvelines பகுதியில் உள்ள Rambouillet நிலையத்தில் மின்சாரக் கோளாறு காரணமாக மீண்டும் நின்றது.
சில பயணிகள் பாரிஸ் செல்ல டாக்ஸி அல்லது VTC வாகனங்களைத் தேர்வு செய்தனர். ரயிலில் இருந்தவர்களுக்கு தண்ணீர் பாட்டில்கள் மட்டுமே வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணச்சீட்டின் முழுத் தொகையும் திருப்பி வழங்கப்படும் என்றும், அதே மதிப்பிலான கொள்முதல் வவுச்சர் வழங்கப்படும் என்றும் SNCF தெரிவித்துள்ளது. Rennes Paris train delay தொடர்பாக இதே பாதையில் ஏப்ரல் மாதத்திலும் இதுபோன்ற சம்பவம் பதிவாகியிருந்தது.
Ouigo Train Classique சேவை 2022 ஏப்ரலில் தொடங்கப்பட்டது. SNCF இயக்கும் இந்த குறைந்த கட்டண ரயில்கள் பாரம்பரிய ரயில் பாதைகளில் இயக்கப்படுகின்றன. பாரிஸ், ரென்ன, நாந்த், போர்டோ உள்ளிட்ட நகரங்களை இணைக்கும் இந்த சேவைக்கான பயணச்சீட்டுகள் 10 யூரோவில் இருந்து தொடங்குகின்றன.































