இது, 2024 அக்டோபரில் பதிவான அமெரிக்க டாலர் 587.7 மில்லியனை விட 21.2% அதிகரிப்பை குறிக்கிறது.
அதேபோல், 2025 ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரை மொத்த வெளிநாட்டு பணமாற்று வருவாய் அமெரிக்க டாலர் 6.52 பில்லியனாக உயர்ந்துள்ளது.
இது, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவான அமெரிக்க டாலர் 5.43 பில்லியனை விட 20.1% அதிகம் என மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய வங்கி தெரிவித்ததாவது, வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் அனுப்பும் பணமாற்றுகள், நாட்டின் வெளிநாட்டு நாணய கையிருப்பு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு முக்கிய பங்களிப்பாக உள்ளது எனவும் கூறியுள்ளது.
































