France Heatwave வானிலை ஆய்வு நிறுவனம் Météo-France வெளியிட்ட தகவலின்படி சில பகுதிகளில் வெப்பநிலை 40°C முதல் 42°C வரை உயரக்கூடும். குறிப்பாக பாரிஸ் மற்றும் வடக்கு, மத்திய பிரான்ஸ் பகுதிகளில் பகலிலும் இரவிலும் வெப்பம் குறையாமல் தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ அதிகாரிகள் வயதானவர்கள் குழந்தைகள் கர்ப்பிணிகள் மற்றும் உடல்நலப் பிரச்சினை உள்ளவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். போதுமான அளவு தண்ணீர் அருந்துதல் மதிய நேரத்தில் வெளியே செல்வதைத் தவிர்த்தல் குளிர்ச்சியான இடங்களில் தங்குதல் ஆகியவை அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

































