அரசுக் கருவூலத்திலிருந்து அமெரிக்க டொலர் 2.5 மில்லியன் காணாமல் போனதாகக் கூறப்படும் சைபர் மோசடி தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கை இன்னும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என சுதந்திர வழக்கறிஞர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
சம்பவம் இடம்பெற்று எட்டு மாதங்களுக்கும் மேலாகியுள்ள நிலையில் விசாரணை அறிக்கைகள் மற்றும் தொடர்புடைய ஆவணங்கள் அடுத்த பாராளுமன்ற அமர்விலேயே சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிபந்தனைகளின் கீழ் அரசின் கடன் முகாமைத்துவப் பொறுப்புகள் மத்திய வங்கியிலிருந்து பொதுக் கடன் முகாமைத்துவ அலுவலகத்திற்கு மாற்றப்பட்டிருந்தன.
இந்த மாற்றக் காலத்தில் ஏற்பட்ட கட்டுப்பாட்டு குறைபாடுகள் மற்றும் கண்காணிப்பு பலவீனங்களே USD 2.5 மில்லியன் இழப்புக்கு வழிவகுத்திருக்கலாம் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இது வெறும் தொழில்நுட்ப தவறு அல்ல என்றும் அரசின் நிதி நிர்வாக அமைப்பில் ஏற்பட்ட பாரிய தோல்வியை வெளிப்படுத்தும் சைபர் மோசடி சம்பவமாகக் கருதப்பட வேண்டும் என்றும் சுதந்திர வழக்கறிஞர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் இந்த விவகாரத்துடன் தொடர்புடையதாக ஒரு அதிகாரியின் உயிரிழப்பும் பதிவாகியுள்ளதாகக் கூறப்படும் நிலையில் சம்பவம் குறித்து முழுமையான விளக்கத்தை அரசு வெளியிட வேண்டும் எனவும் அந்த அமைப்பு கோரியுள்ளது.





Leave a Reply