யாழ்ப்பாணம் தீவகப் பகுதியில் மாடுகளை களவாடி சட்டவிரோதமாக இறைச்சியாக்குதல் மற்றும் வீடுகளை உடைத்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 07 பேரை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வேலணை, புங்குடுதீவு மற்றும் அல்லைப்பிட்டி பகுதிகளில் அண்மைக் காலமாக மாடுகள் களவாடப்பட்டு சட்டவிரோதமாக இறைச்சியாக்கப்பட்ட சம்பவங்களும், வீடுகளை உடைத்து நகை மற்றும் பணம் திருடப்பட்ட சம்பவங்களும் அதிகரித்திருந்த நிலையில் பொதுமக்கள் வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன் அவர்களில் பிரதான சந்தேகநபரிடமிருந்து 2300 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.





Leave a Reply