1990 ஆம் ஆண்டு இடம்பெற்ற இடம்பெயர்வின் பின்னர் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்களது சொந்த நிலங்களில் மீண்டும் குடியேற முடியாத நிலை தொடர்கின்றது என போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர். யுத்தம் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்த போதிலும் இன்னும் சில பகுதிகள் இராணுவக் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அவற்றை விடுவித்து காணி உரிமையாளர்களுக்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
மீள்குடியேற்றம் காணி உரிமை மற்றும் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பது தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து போராட்டக்காரர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.



























