சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

ஐரோப்பிய ஒன்றியம் – ஏப்ரல் 10 முதல் புதிய பயோமெட்ரிக் எல்லை சிஸ்டம்.

ஐரோப்பிய ஒன்றியம் (EU) 2026 ஏப்ரல் 10 முதல் புதிய Entry/Exit System (EES) எனப்படும் பயோமெட்ரிக் எல்லை கட்டுப்பாட்டு முறையை முழுமையாக அமல்படுத்துகிறது. இந்த புதிய முறையின் கீழ் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியேயுள்ள பயணிகள் (உதா: ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள்) நாட்டில் நுழையும்போது விரல் முத்திரை மற்றும் முக ஸ்கேன் வழங்க வேண்டும்.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

இதன் மூலம் பழைய பாஸ்போர்ட் முத்திரை முறை நீக்கப்பட்டு, பயணிகளின் வருகை மற்றும் வெளியேறும் தகவல்கள் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்படும்.

புதிய அமைப்பு பாதுகாப்பை மேம்படுத்தவும் விசா காலக்கெடு மீறி தங்குபவர்களை கண்டறியவும் உதவும் என EU கூறுகிறது. ஆனால் ஆரம்ப கட்டத்தில் இந்த பயோமெட்ரிக் பதிவு செயல்முறை அதிக நேரம் எடுப்பதால் விமான நிலையங்களில் 70% வரை நீண்ட வரிசைகள் உருவாகும் என்று விமான நிறுவனங்கள் மற்றும் பயண துறை எச்சரிக்கை விடுத்துள்ளன.

சில இடங்களில் பயணிகள் 1 முதல் 2 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப சோதனைகள் காட்டுகின்றன.

இந்த EES முறை Schengen பகுதியிலுள்ள 29 ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் குறுகிய கால (90 நாள் வரை) சுற்றுலா தொழில் மற்றும் குடும்ப பயணங்களுக்கு பொருந்தும். முதல் முறை பயணிக்கும் போது தகவல் சேகரிப்பு நேரம் அதிகமாக இருந்தாலும் அடுத்த முறை பயணம் செய்யும் போது அதே பயோமெட்ரிக் தகவல் பயன்படுத்தப்படுவதால் செயல்முறை விரைவாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

மேலும் 2026 இறுதியில் அறிமுகமாகவுள்ள ETIAS எனும் ஆன்லைன் பயண அனுமதி முறைக்கான அடித்தளமாகவும் இது அமைகிறது. பயணிகள் முன்கூட்டியே கூடுதல் நேரத்தை திட்டமிடவும் இணைப்பு விமானங்களுக்கு (connecting flights) இடைவெளியை அதிகப்படுத்தவும் பயண நிறுவனங்கள் பரிந்துரைக்கின்றன.

Leave a Reply

Recent posts

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்