வானிலை மாற்றங்களால் விவசாயம், நீர்வள முகாமைத்துவம் மற்றும் மின்சார உற்பத்தி உள்ளிட்ட முக்கிய துறைகள் பாதிக்கப்படலாம் என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். குறிப்பாக விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பேரிடர் அபாயம் அதிகம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்துடன் இணைந்து எல் நினோ தாக்கமும் அதிகரிக்கும் சூழலில் பேரிடர் மேலாண்மை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களும் அதிகாரப்பூர்வ வானிலை அறிவிப்புகளை தொடர்ந்து கவனித்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.Sri Lanka News
வரும் வாரங்கள் மற்றும் மாதங்களில் வானிலை திடீரென மாறக்கூடிய சூழல் காணப்படுவதால் பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதுடன் விவசாயம் மற்றும் அன்றாட நடவடிக்கைகளையும் வானிலை முன்னறிவிப்புகளுக்கு ஏற்ப திட்டமிடுவது அவசியம் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
































