Tag: Agriculture
Bamboo Bio Fence, இலங்கையில் நீண்டகாலமாக நீடித்து வரும் மனிதர் யானை மோதலைக் குறைக்கும் நிலையான தீர்வாக மூங்கில் உயிரியல் வேலி அமைக்கும் திட்டத்திற்கு தேவையான தொழில்நுட்பம், ஆய்வு மற்றும் ஆராய்ச்சி உதவிகளை வழங்க சீனா இணக்கம் தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயக்கொடி தலைமையிலான இலங்கை பிரதிநிதிகள் குழு, பெய்ஜிங்கில் உள்ள சர்வதேச மூங்கில் மற்றும் பிரம்பு மையம் (INBAR) மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது […]
இத்தாலியின் தொழிலாளர் சுரண்டல், விவசாயத் துறையில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் நவீன அடிமைத்தனத்தை ஒத்த சூழலில் வேலை செய்ய வைக்கப்படுவதாக புதிய குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் மனித உரிமை அமைப்புகள் மற்றும் தொழிலாளர் சங்கங்களிடையே மீண்டும் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. அறிக்கைகளின்படி சில தொழிலாளர்கள் மிகவும் குறைந்த ஊதியம் நீண்ட நேர வேலை பாதுகாப்பற்ற தங்குமிடங்கள் போதிய ஓய்வு இல்லாமை மற்றும் சட்டப்பூர்வ வேலை ஒப்பந்தங்கள் இன்றி பணியாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிலர் இடைத்தரகர்கள் […]
அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் நாளை (20) முதல் ஒரு வெள்ளை முட்டையின் விற்பனை விலையை ரூ.41 ஆகவும் ஒரு சிவப்பு முட்டையின் விலையை ரூ.42 ஆகவும் உயர்த்த தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். குளியாபிட்டியவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் இந்த விலை உயர்வுக்கு அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் நேரடியாகப் பொறுப்பாளிகள் என குற்றம்சாட்டினார். மக்காச்சோள இறக்குமதி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் உள்ளூர் மக்காச்சோள உற்பத்தி முட்டைத் தொழிலின் […]
யாழ்ப்பாணம் வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள தனியார் காணிகளில் இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் விவசாய நடவடிக்கைகள் தொடர்பாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பாதுகாப்பு பிரதியமைச்சர் வலி.வடக்கில் 1,661 ஏக்கர் காணி இராணுவத் தேவைக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான இழப்பீடு காணி உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததுடன் அந்தப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் விவசாயம் இராணுவத்தின் உள்நாட்டு தேவைகளுக்காக மட்டுமே என கூறியிருந்தார். எனினும் அந்தக் கூற்றை நிராகரித்துள்ள வலி.வடக்கு மக்கள் தங்களது […]
Asia News,கடந்த ஆண்டு டிட்வா (Ditwah) சூறாவளியால் பயிர்களை இழந்த 2 இலட்சத்திற்கும் அதிகமான விவசாயிகளுக்கு ரூ.12,341.5 மில்லியன் (சுமார் ரூ.1234 கோடி) இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் விவசாயக் காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட டிட்வா சூறாவளியால் சேதமடைந்த விவசாய நிலங்களுக்காக இந்த இழப்பீட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான கொடுப்பனவுகள் தற்போது நிறைவு செய்யப்பட்டு வருவதாகவும் அந்தச் சபை குறிப்பிட்டுள்ளது. விவசாய அபிவிருத்தித் திணைக்களத்தின் ஊடாக 1,48,000 […]
Sri Lanka News,இலங்கையில் வரவிருக்கும் மாதங்களில் எல் நினோ தாக்கம் காரணமாக வானிலை அதிக மாற்றங்களைச் சந்திக்கக்கூடும் என காலநிலை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் நாட்டின் பல பகுதிகளில் அதிக வெப்பம், திடீர் கனமழை, வறட்சி மற்றும் பலத்த காற்று போன்ற அசாதாரண காலநிலை நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வானிலை மாற்றங்களால் விவசாயம், நீர்வள முகாமைத்துவம் மற்றும் மின்சார உற்பத்தி உள்ளிட்ட முக்கிய துறைகள் பாதிக்கப்படலாம் என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். குறிப்பாக விவசாயிகள், மீனவர்கள் மற்றும் […]
தற்போதைய அரசாங்கத்திடம் நாட்டை முன்னேற்றுவதற்கான தெளிவான வேலைத்திட்டம் எதுவும் இல்லாமல் அரசியல் எதிரிகளையும் எதிர்க்கட்சியினரையும் கைது செய்து சிறையில் அடைப்பதையே பிரதான நடவடிக்கையாகக் கொண்டு செயல்படுவதாக சர்வஜன அதிகாரம் கட்சியின் உப தலைவர் கலாநிதி சன்ன ஜயசுமன குற்றஞ்சாட்டியுள்ளார். காலி பத்தேகம பகுதியில் நேற்று (05) நடைபெற்ற சர்வஜன அதிகாரம் கட்சியின் மக்கள் சந்திப்பில் உரையாற்றிய அவர் இந்த நிலை தொடர்ந்தால் இறுதியில் விவசாயிகளையும், “டெங்கு நுளம்புகளைக் கூட சிறையில் அடைக்க வேண்டிய நிலை ஏற்படும்” என […]
எல் நினோ மற்றும் லா நினா காலநிலை மாற்றங்களால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கு அறிவியல் தரவுகள் ஆய்வுகள் மற்றும் நிபுணர்களின் ஆலோசனைகளை அடிப்படையாகக் கொண்ட தேசிய கொள்கைகள் உருவாக்கப்படுவது அவசியம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எல் நினோ மற்றும் லா நினா தொடர்பான நிபுணர்களுடனான விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் இந்த காலநிலை மாற்றங்கள் விவசாயம் உணவுப் பாதுகாப்பு நீர்வளங்கள் மற்றும் […]
இலங்கையின் தேங்காய் ஏற்றுமதி துறை 2026 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலகளாவிய வர்த்தக சவால்கள் தொடர்ந்தபோதிலும் ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலத்தில் 514 மில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தேங்காய் அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.இது கடந்த 2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 21% வளர்ச்சியாக பதிவாகியுள்ளது. உலகின் பல பகுதிகளில் கப்பல் போக்குவரத்து பாதிப்பு, மத்திய கிழக்கில் நீடிக்கும் மோதல், […]
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருந்தாலும் விவசாயிகளின் சாபத்துக்கு ஆளானால் எந்த அரசாங்கமும் நீண்ட காலம் நிலைத்திருக்க முடியாது என தேசிய விவசாய ஒற்றுமை ஒன்றியத்தின் தலைவர் அனுராத தென்னக்கோன் எச்சரித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் விவசாயிகளின் போராட்டங்களை அரசியல் நோக்கத்துடன் அவமதிப்பது தவறான செயல் எனக் குறிப்பிட்டார். நெல் உற்பத்திக்கான செலவுகள் எரிபொருள் மற்றும் உர விலைகள் அதிகரித்துள்ள நிலையில் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை நியாயமான விலைக்கு விற்க முடியாத சூழல் உருவாகியுள்ளதாக அவர் […]