எனினும் அந்தக் கூற்றை நிராகரித்துள்ள வலி.வடக்கு மக்கள் தங்களது காணிகள் பல ஆண்டுகளாக பாதுகாப்பு காரணம் காட்டி கையகப்படுத்தப்பட்ட நிலையில் அதே காணிகளில் இராணுவத்தினர் விவசாயம் செய்து உற்பத்தி செய்யும் மரக்கறிகளை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் வர்த்தக நிலையங்களுக்கு விற்பனை செய்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
குறிப்பாக பலாலி வீதி உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள தனியார் பல்பொருள் அங்காடியின் மரக்கறி கொள்வனவு நிலையத்திற்கு இராணுவத்தினர் பெருமளவில் விவசாயப் பொருட்களை விநியோகித்து வருவதாகவும் அதற்கான காணொளி ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கை உள்ளூர் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதிப்பதாக சுட்டிக்காட்டிய மக்கள் மக்களின் காணிகளை மீண்டும் உரிமையாளர்களிடம் ஒப்படைத்து நீண்டகால காணி பிரச்சினைக்கு அரசாங்கம் நிரந்தரத் தீர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
































