நெல் உற்பத்திக்கான செலவுகள் எரிபொருள் மற்றும் உர விலைகள் அதிகரித்துள்ள நிலையில் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை நியாயமான விலைக்கு விற்க முடியாத சூழல் உருவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதுவே தற்போதைய போராட்டங்களுக்கு காரணம் என்றும் விவசாயிகளின் உண்மையான பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடியாக தீர்வு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இல்லையெனில் விவசாயிகளின் நம்பிக்கையை இழப்பது அரசாங்கத்திற்கு கடும் அரசியல் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் எச்சரித்தார்.

































