இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுவதால் உள்நாட்டு நெல் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய விவசாய ஒன்றியத்தின் செயலாளர் உபாலி ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். உருளுவெவ பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் உற்பத்தி செய்யப்பட்ட நெல் இருப்புகள் இன்னும் விவசாயிகளின் வீடுகளில் தேங்கிக் காணப்படுவதாக கூறினார்.
சந்தையில் ஒரு கிலோ நெல் 95 முதல் 100 ரூபாய் வரையிலேயே விற்கப்படுவதால் விவசாயிகள் பெரும் நட்டத்தை சந்தித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். உள்நாட்டில் போதியளவு நெல் இருப்புகள் இருந்தபோதும் வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுவதால் பெரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் உள்நாட்டு நெல்லைக் கொள்வனவு செய்ய மறுப்பதாகவும் தெரிவித்தார்.
இதன் விளைவாக விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர் அதிகாரிகள் களமிறங்கி விவசாயிகளின் உண்மை நிலையை ஆய்வு செய்து உடனடி தீர்வுகளை வழங்க வேண்டும் என்றும் உள்நாட்டு விவசாயத்தை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.





Leave a Reply