சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு நியாயமான உத்தரவாத விலைகளை எதிர்பார்த்தபோதிலும் கடந்த காலத்தைப் போலவே இந்த அரசாங்கத்தாலும் அவற்றைத் தீர்மானித்து வழங்க முடியவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (21) பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்தார். 

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்

வெங்காயம் பெரிய வெங்காயம் உருளைக் கிழங்கு வட்டக்காய நெல் உள்ளிட்ட பல உற்பத்திகளுக்கு அரசாங்கத்தால் உத்தரவாத விலைகளைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. உர மானியமும் உரிய நேரத்தில் விவசாயிகளுக்குக் கிடைக்கவில்லை. தற்போது பெரும்போகச் செய்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்தருணத்தில் உர மானியம் கிடைக்காததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் இந்தச் சமயத்திலேயே உர மானியத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading