அத்துடன் IMF வேலைத்திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில் நாட்டின் அந்நியச் செலாவணி வருவாய் குறைந்து வருவதாகவும் குறிப்பிட்டார். மேலும் தற்போதைய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் சர்வதேச மனித உரிமை தரங்களுக்கு முரணானதாக ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருவதாகவும் புதிய சட்டம் அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் உள்ளடக்கி சர்வதேச தரங்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இல்லையெனில் GSP+ சலுகை இழப்பால் இலங்கை பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக அவர் எச்சரித்தார்.
GSP+ சலுகை ஆபத்தில் ஜி.எல். பீரிஸ் எச்சரிக்கை
சர்வதேச சட்டங்களுக்கு இணங்கும் வகையில் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்தத் தவறினால் இலங்கைக்கு வழங்கப்படும் GSP+ வரிச்சலுகை ஆபத்துக்குள்ளாகும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் எச்சரித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கொழும்பு அலுவலக அதிகாரிகளுடன் அண்மையில் நடைபெற்ற சந்திப்பில் மக்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் மற்றும் பிற நிவாரணங்களை குறைக்கவோ நிறுத்தவோ அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்க வேண்டாம் என கோரியதாக தெரிவித்தார்.






























