இந்த சந்திப்பின் போது இலங்கை மற்றும் அமெரிக்கா இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இரு நாடுகளுக்கும் பொதுவான நலன்சார் விடயங்கள் பற்றியும் விரிவான கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சர்வதேச மற்றும் பிராந்திய சூழ்நிலைகளில் இருநாட்டு ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் வாய்ப்புகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இலங்கை – அமெரிக்க உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



























