கடந்த 15 ஆண்டுகளாக குடும்பத்துடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வந்த அவர் ஷார்ஜாவில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் கொள்முதல் மேலாளராக பணியாற்றி வந்தார். இரண்டாவது சம்பவத்தில கர்நாடகாவைச் சேர்ந்த 38 வயதான சஃப்வான் ஷானு, துபாயில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது மைதானத்திலேயே திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
நான்கு குழந்தைகளின் தந்தையான அவர் நண்பர்களுடன் விளையாடிய வேளையில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த இரு மரணங்களும் வெளிநாட்டு இந்திய சமூகத்தினரிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன





























