கடந்த வாரம் அமெரிக்கா இலங்கைக்கு வழங்கிய கடல்சார் கண்காணிப்பு கப்பல் உள்ளிட்ட நடவடிக்கைகள், இரு நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என இச்சந்திப்பில் வலியுறுத்தப்பட்டதாக அமெரிக்க தூதர் ஜூலி சுங் சமூக வலைதளத்தில் குறிப்பிட்டார்.
இந்த ஒத்துழைப்புகள் இலங்கையின் இறையாண்மையை மதிக்கும் வகையிலும், இரு நாடுகளின் பொதுவான மூலோபாய நலன்களை முன்னிறுத்தும் வகையிலும் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இலங்கையின் மீட்பு நடவடிக்கைகள் தொடரும் நிலையில் வர்த்தகம், முதலீடு, குறுகியகால பொருளாதார நிலைத் துறுதிப்பாடு போன்ற முக்கிய பொருளாதார முன்னுரிமைகள் குறித்தும் இச்சந்திப்பில் விவாதிக்கப்பட்டது.
‘டிட்வா’ சூறாவளியால் உயிரிழந்தோருக்கு அமெரிக்க தரப்பு இரங்கல் தெரிவித்ததுடன், இலங்கையுடன் வலுவான இருதரப்பு உறவைத் தொடரும் தங்களது உறுதிப்பாட்டையும் மறுபடியும் வலியுறுத்தியது.


























