அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவர்களின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான சிறப்புத் தூதுவராக செயற்படும் செர்ஜியோ கோர் தொடர்பான தகவல்கள் அண்மையில் மேலும் கவனம் பெற்றுள்ளன. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவின் நியூயோர்க் நகருக்கு பயணம் மேற்கொண்டிருந்த வேளையில் செர்ஜியோ கோருடன் விசேட சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தார்.
இந்த சந்திப்பில் இலங்கை – அமெரிக்க உறவுகள் பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் எதிர்கால இருதரப்பு தொடர்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது ஜனாதிபதி ட்ரம்புடன் நேரடி தொடர்பை ஏற்படுத்துவதற்கான வசதியைத் தன்னால் எந்நேரத்திலும் ஏற்பாடு செய்து தர முடியும் என கோர் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் உறுதியளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கிடையிலான அரசியல் மற்றும் தூதரக உறவுகளின் முக்கியத்துவத்தை மீண்டும் வெளிப்படுத்துவதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.






Leave a Reply