சமூக வலைத்தளங்களில் 10 பவுன், 20 பவுன் வரை வரி இல்லை போன்ற தகவல்கள் பரவலாக பகிரப்படுகின்றன. ஆனால் இலங்கை சுங்கத் திணைக்களம் தற்போது தங்க நகைகளுக்கு எத்தனை பவுன் என்ற நிரந்தர வரம்பை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. அதற்கு பதிலாக தனிப்பட்ட பயன்பாட்டிற்கான மற்றும் வணிக நோக்கமற்ற அளவிலான தங்க நகைகளை மட்டுமே கொண்டு வர அனுமதிக்கப்படுகிறது.
வளைகுடா நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும்போது தங்க நகைகள் வெளிநாட்டு நாணயம் மற்றும் ரத்தினங்கள் போன்றவற்றை சுங்க அதிகாரிகளிடம் கட்டாயம் அறிவிக்க வேண்டும். அறிவிக்காமல் கொண்டு வந்தால் சுங்கச் சட்டத்தின் கீழ் விசாரணை அபராதம் அல்லது பறிமுதல் நடவடிக்கை எடுக்கப்படலாம்.
Duty-Free Allowance மூலமாக கொண்டு வர முடியுமா ?
வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகள் குறிப்பிட்ட மதிப்பிற்குள் பொருட்களை கொண்டு வந்தால் அதற்கு சுங்க வரி (Customs Duty) மற்றும் சில பிற வரிகளை செலுத்தாமல் அனுமதிக்கப்படும்.
உதாரணமாக, நீங்கள் சவுதி அரேபியா அல்லது துபாயில் 1 வருடத்திற்கு மேல் வேலை செய்து இலங்கைக்கு வருகிறீர்கள் எனில் வெளிநாட்டில் வாங்கிய பொருட்களை USD 1,000 மதிப்பிற்குள் அல்லது கட்டுநாயக்கா வருகை Duty Free கடையில் வாங்கும் பொருட்களை USD 1,750 மதிப்பிற்குள் வரி இல்லாமல் கொண்டு வரலாம்
இது நீங்கள் வெளிநாட்டில் தங்கி இருந்த காலப்பகுதியை பொறுத்தும் மற்றும் சட்டபூர்வமாக அனுப்பிய பணத்தை பொறுத்தும் அமையும். சட்டபூர்வ வங்கி வழியாக பணம் அனுப்பும் இலங்கையர்களுக்கு Silver, Gold, Gold Plus, Platinum திட்டங்களின் கீழ் கூடுதல் Duty-Free Allowance வழங்கப்படுகிறது. உதாரணமாக Gold பிரிவில் உள்ளவர்களுக்கு வழக்கமான சலுகைக்கு மேலாக USD 1,440 வரை கூடுதல் சலுகை கிடைக்கலாம்.
எனவே தங்க நகைகள் தனியாக சுங்க விதிகளின் கீழ் பரிசோதிக்கப்படுகின்றன. அதிகளவு தங்கம் வணிக நோக்கிலான தங்கம் அல்லது தங்க கட்டிகள் (Gold Biscuits) இருந்தால் அவற்றை அறிவிக்க வேண்டும். சுங்க அதிகாரிகள் அதன் தன்மை மற்றும் மதிப்பை மதிப்பீடு செய்வார்கள்.

எனவே தற்போது நடைமுறையில் உள்ள உண்மையான விதி என்னவெனில், Duty-Free Allowance என்பது வரி இல்லாமல் கொண்டு வரக்கூடிய பொருட்களின் மொத்த மதிப்பு. இது எத்தனை பவுன் தங்கம் கொண்டு வரலாம் என்ற விதி அல்ல.
எத்தனை பவுன் என்ற எண்ணிக்கையை நம்பாமல் தனிப்பட்ட பயன்பாட்டிற்கான நகைகள் மட்டுமே கொண்டு வர வேண்டும். அதிகளவு தங்கம் தங்க கட்டிகள் (Gold Biscuits) அல்லது விற்பனை நோக்கமுள்ள நகைகள் கொண்டு வரும்போது சுங்க அனுமதி மற்றும் வரி தொடர்பான விதிகள் பொருந்தும்.
































