விவசாய அபிவிருத்தித் திணைக்களத்தின் ஊடாக 1,48,000 ஏக்கர் நெற்பயிர்களை இழந்த 1,16,278 விவசாயிகளுக்கு ரூ.8,888.5 மில்லியன் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.அதேவேளை விவசாயத் திணைக்களத்தின் மூலம் மகாவலி பிரதேசங்கள், மாகாணங்கள் மற்றும் இடைமாகாணப் பகுதிகளில் மக்காச்சோளம், காய்கறிகள் மற்றும் ஏனைய பயிர்களை பயிரிட்ட 85,747 விவசாயிகளுக்கு ரூ.3,453 மில்லியன் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்தின் கீழ் நெற்பயிருக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.150,000 வீதமும், மக்காச்சோளம், காய்கறிகள் மற்றும் ஏனைய பயிர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.200,000 வீதமும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.Asia News
நாட்டின் பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் அரசின் பொருளாதார முகாமைத்துவ நடவடிக்கைகள் காரணமாக இவ்வளவு பெரிய அளவிலான இழப்பீட்டு வழங்கல் சாத்தியமானதாக அமைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த நிதியுதவி இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மீண்டும் விவசாய நடவடிக்கைகளைத் தொடர முக்கிய ஆதரவாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.





























