சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Bamboo Bio Fence, இலங்கையில் நீண்டகாலமாக நீடித்து வரும் மனிதர் யானை மோதலைக் குறைக்கும் நிலையான தீர்வாக மூங்கில் உயிரியல் வேலி அமைக்கும் திட்டத்திற்கு தேவையான தொழில்நுட்பம், ஆய்வு மற்றும் ஆராய்ச்சி உதவிகளை வழங்க சீனா இணக்கம் தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயக்கொடி தலைமையிலான இலங்கை பிரதிநிதிகள் குழு, பெய்ஜிங்கில் உள்ள சர்வதேச மூங்கில் மற்றும் பிரம்பு மையம் (INBAR) மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது மூங்கில் சாகுபடி, நவீன செயலாக்க தொழில்நுட்பங்கள், மூங்கிலை அடிப்படையாகக் கொண்ட தொழில்துறை உற்பத்திகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த அபிவிருத்தி திட்டங்கள் குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இதன்போது இலங்கையில் மனிதர் யானை மோதலைக் குறைக்கும் நிலையான நடவடிக்கையாக மூங்கில் உயிரியல் வேலி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சீனாவின் ஒத்துழைப்பை பிரதி அமைச்சர் அன்டன் ஜயக்கொடி உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுத்தார். Bamboo Bio Fence

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

அதற்கு பதிலளித்த சீன அதிகாரிகள் இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த தேவையான நவீன தொழில்நுட்பம், தொழில்நுட்ப நிபுணத்துவம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆதரவு உள்ளிட்ட அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தனர். மேலும் இந்த திட்டம் மனிதர் யானை மோதலைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல் மூங்கிலை அடிப்படையாகக் கொண்ட சிறு தொழில்களை ஊக்குவிப்பதன் மூலம் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் என சீன அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply

Recent posts

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்