ஜூலை மாத வருகை தரவுகளின்படி 38,785 பயணிகளுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதனைத் தொடர்ந்து இங்கிலாந்தில் இருந்து 18,417 பேர், நெதர்லாந்தில் இருந்து 10,540 பேர், சீனாவில் இருந்து 10,238 பேர் மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்து 8,466 பேர் இலங்கைக்கு சுற்றுலா நோக்கில் வந்துள்ளனர். ஆண்டு முழுவதையும் கணக்கில் எடுத்தால் 332,468 சுற்றுலாப் பயணிகளுடன் இந்தியா இலங்கையின் மிகப்பெரிய சுற்றுலா சந்தையாக தொடர்கிறது. 126,986 வருகைகளுடன் இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும் 86,409 வருகைகளுடன் சீனா மூன்றாவது இடத்திலும் இடம்பெற்றுள்ளன. Sri Lanka Tourism
இதற்கிடையில் 2026 ஆம் ஆண்டில் இதுவரை அதிகபட்ச மாதாந்திர சுற்றுலா வருகை பெப்ரவரி மாதத்தில் பதிவாகியுள்ளது. அந்த மாதத்தில் மட்டும் 279,328 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக SLTDA தெரிவித்துள்ளது. சுற்றுலாத் துறையின் இந்த வளர்ச்சி நாட்டின் அந்நியச் செலாவணி வருவாயை அதிகரிப்பதுடன் ஹோட்டல், போக்குவரத்து, உணவகம் மற்றும் சிறு தொழில்கள் உள்ளிட்ட பல துறைகளுக்கும் பொருளாதார ரீதியாக ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.






























