Tag: India
இந்திய பிரதமர் நரேந்திர மோடி யின் Facebook பதிவொன்று கடந்த ஜூலை மாதம் தவறுதலாக தற்காலிகமாக கட்டுப்படுத்தப்பட்ட விவகாரத்தில் Meta நிறுவனம் இந்திய அரசிடம் அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கோரியுள்ளது. Meta நிறுவனத்தின் உலகளாவிய கொள்கைத் தலைவர் ஜோயல் கப்லன் இது மனிதத் தவறு அல்லது திட்டமிட்ட நடவடிக்கை அல்ல என்றும் செயல்பாட்டு பிழை காரணமாக ஏற்பட்ட சம்பவம் என்றும் விளக்கம் அளித்துள்ளார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் Meta அதிகாரிகளை நேரில் அழைத்து […]
India Test Series, இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி எதிர்வரும் ஆகஸ்ட் 4 ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரை முன்னிட்டு இந்திய வீரர்கள் தங்களது தயார்படுத்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இலங்கை சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணி முதற்கட்டமாக பயிற்சி முகாமில் ஈடுபடவுள்ளது. அதனைத் தொடர்ந்து தொடருக்கு முன்னோட்டமாக பயிற்சி போட்டியிலும் […]
Sri Lanka Tourism, 2026 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 13 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி ஜனவரி 1 முதல் ஜூலை 26 வரை மொத்தம் 1,313,974 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர். ஜூலை 1 முதல் ஜூலை 26 வரையிலான காலப்பகுதியில் மட்டும் 167,401 சர்வதேச சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இதன் […]
Sarnath UNESCO World Heritage, இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் வாராணசிக்கு அருகில் அமைந்துள்ள பண்டைய புத்த மதப் புனிதத் தலமான சார்நாத் (Sarnath) யுனெஸ்கோவின் (UNESCO) உலக பாரம்பரிய பட்டியலில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டுள்ளது. தென் கொரியாவின் புசானில் நடைபெற்ற உலக பாரம்பரியக் குழுவின் 48வது அமர்வில் இந்த முக்கியமான தீர்மானம் எடுக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. புத்தர் போத்கயாவில் ஞானம் பெற்ற பின்னர் தனது […]
NEET மாணவர் போராட்டம், இந்திய மத்திய கல்வி அமைச்சராக பதவி வகித்து வந்த தர்மேந்திர பிரதான் நாடு முழுவதும் நடைபெற்ற மாணவர் போராட்டங்களுக்கிடையில் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். NEET உள்ளிட்ட தேசியத் தேர்வுகளில் ஏற்பட்டதாகக் கூறப்படும் முறைகேடுகள் வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டுகள் மற்றும் கல்வி அமைப்பின் நம்பகத்தன்மை குறித்து மாணவர்கள் தொடர்ந்து பல வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கல்வி அமைப்பில் வெளிப்படைத்தன்மை பொறுப்புக்கூறல் மற்றும் சீர்திருத்தங்களை கோரி பல மாநிலங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. […]
Sri Lankan Pilgrims Visa, இந்தியாவுக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் இலங்கைப் பிரஜைகளுக்கான விசா கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெளிவுபடுத்தியுள்ளது. அண்மையில் வெளியான தகவல்களைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது. உயர்ஸ்தானிகரகத்தின் அறிக்கையின்படி புதிய விசா சேவை வழங்குநர் கடந்த ஜூலை 7 முதல் சேவையை ஆரம்பித்ததைத் தொடர்ந்து யாத்திரிகர்களுக்கு இலவச (Gratis) விசா வழங்கும் நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. புத்தசாசன, சமய […]
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டத்தில் குளிரூட்டப்பட்ட தண்ணீர் போத்தல் என நினைத்து தவறுதலாகக் கழிவறை சுத்திகரிப்பு அமிலத்தை குடித்த 23 வயதுடைய இளம் ஆசிரியை ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை மாலை நகைக் கடையொன்றுக்குச் சென்றிருந்த அவர் தாகம் காரணமாக குடிநீர் கேட்டதையடுத்து கடை ஊழியர் அருகிலுள்ள கடையிலிருந்து வாங்கி வந்த போத்தலில் தண்ணீருக்குப் பதிலாக கழிவறை சுத்திகரிப்பு அமிலம் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. போத்தலில் […]
Vietnam News, வியட்நாமின் பிரபல சுற்றுலாத் தீவான பு குவொக் அருகே இடம்பெற்ற படகு விபத்தில் குறைந்தது 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை இடம்பெற்ற இந்த விபத்தில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்துள்ளது. அந்த படகில் மொத்தம் 36 பேர் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இதில் 32 இந்திய சுற்றுலாப் பயணிகள் 3 படகு பணியாளர்கள் மற்றும் ஒரு உதவியாளர் ஆகியோர் இருந்துள்ளனர். விபத்துக்குப் பின்னர் 21 பேர் உயிருடன் […]
India News,இந்தியாவில் சிறுவர்களை பாலியல் ரீதியாக சுரண்டுவதற்கும் துஷ்பிரயோகம் செய்வதற்கும் தொடர்புடைய உள்ளடக்கங்களை ஊக்குவித்ததாகக் கூறப்படும் விளம்பரங்களை உடனடியாக நீக்குமாறு மெட்டா நிறுவனத்திற்கு இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் தளத்தில் இத்தகைய சட்டவிரோத உள்ளடக்கங்களுக்கு வழிவகுக்கும் கட்டண விளம்பரங்கள் வெளியாகியதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சிறுவர் பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோக உள்ளடக்கங்கள் தொடர்பான அனைத்து விளம்பரங்களையும் அவற்றை அணுக வழிவகுக்கும் பதிவுகளையும் இன்ஸ்டாகிராமில் […]
இந்தியாவில் கட்டாயமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள E20 பெட்ரோல் (20% எத்தனால் கலந்த பெட்ரோல்) திட்டத்தைச் சுற்றியுள்ள சர்ச்சை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. எரிபொருள் செயல்திறன் குறைவு, வாகனங்களின் மைலேஜ் பாதிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் காரணமாக பொதுமக்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.இந்திய அரசு கடந்த ஆண்டு முதல் E20 எரிபொருள் பயன்பாட்டை கட்டாயமாக்கியது. ஆனால் இதனால் வாகனங்களின் செயல்திறன் குறைந்துள்ளதாகவும் எரிபொருள் விரைவாக செலவாகிறது என்றும் பல வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த […]