Meta நிறுவனத்தின் உலகளாவிய கொள்கைத் தலைவர் ஜோயல் கப்லன் இது மனிதத் தவறு அல்லது திட்டமிட்ட நடவடிக்கை அல்ல என்றும் செயல்பாட்டு பிழை காரணமாக ஏற்பட்ட சம்பவம் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் Meta அதிகாரிகளை நேரில் அழைத்து விளக்கம் கேட்டது. மேலும் மோடியை அவமதிக்கும் வகையிலான Facebook வீடியோக்கள் தொடர்பாக Meta India தலைவருக்கு எதிராக காவல்துறையில் வழக்கும் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதனுடன் தொடர்புடைய சந்திப்பில் Meta நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸக்கர்பெர்க் குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கம் Deepfake வீடியோக்கள் மற்றும் தளத்தின் சில செயல்பாட்டு குறைபாடுகள் குறித்தும் இந்திய அரசிடம் வருத்தம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.





























