போத்தலில் இருந்தது அமிலம் என்பதை அறியாமல் ஒரு மடக்கு குடித்த உடனேயே அவரது தொண்டை மற்றும் உள்வயிற்றுப் பகுதியில் கடுமையான எரிச்சல் ஏற்பட்டதால் அவர் அலறியபடி கடையிலிருந்து வெளியே ஓடிவந்தார். உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் உடல்நிலை மோசமடைந்ததால் மீரட்டிலுள்ள அதிநவீன மருத்துவ மையத்துக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில் சம்பவம் பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஆரம்பக்கட்ட விசாரணையில் சம்பந்தப்பட்ட நகைக் கடை உரிமையாளர் உரிய அனுமதியின்றி கழிவறை சுத்திகரிப்பு அமிலத்தை பழைய குடிநீர் போத்தல்களில் மாற்றி விற்பனைக்காக வைத்திருந்ததும் அவற்றில் ஒன்று தவறுதலாக குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக உணவுப் பாதுகாப்புத் துறைக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் நகைக் கடை மற்றும் தொடர்புடைய கடை உரிமையாளர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.






























