இந்த அனர்த்தத்தில் சிக்கியவர்களில் 82 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 581 குடும்பங்களைச் சேர்ந்த 2,331 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்தார். மேலும் அம்பகமுவ பகுதியில் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டவர்கள் உட்பட ஆறு பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Hatton Landslide
மலைப்பாங்கான பகுதிகளில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் அவதானமாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அபாயகரமான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.






























