தற்போதைய 15% வரி விகிதத்தை உயர்த்தும் இந்த நடவடிக்கை, ஐரோப்பிய ஒன்றியம் முன்னதாக ஒப்புக்கொண்ட வர்த்தக ஒப்பந்த நிபந்தனைகளை முழுமையாக பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த புதிய வரி அடுத்த வாரம் அமலுக்கு வரக்கூடும் என்றும் அமெரிக்காவில் தயாரிக்கப்படும் வாகனங்களுக்கு இந்த வரி பொருந்தாது என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். இதனால் ஐரோப்பிய கார் உற்பத்தியாளர்கள் அமெரிக்காவில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய அழுத்தம் ஏற்படும் எனவும் கூறப்படுகிறது.
இந்த அறிவிப்பு அமெரிக்கா–ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான வர்த்தக உறவுகளில் பதற்றத்தை அதிகரித்துள்ளதுடன் ஐரோப்பிய தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பும் எழுந்துள்ளது.































