கடலில் நீராடிக்கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட பலத்த நீரோட்டம் காரணமாக அவர் ஆழமான பகுதிக்குள் இழுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை அவதானித்த பொலிஸ் உயிர்காப்பு பிரிவு அதிகாரிகள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டு இளைஞரை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்ததுடன் அவருக்கு தேவையான அடிப்படை முதலுதவிகளையும் வழங்கியுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கடலில் நீரோட்டத்தில் சிக்கிய இளைஞர்
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏத்துகல கடற்பரப்பில் நேற்று (10) மாலை நீராடச் சென்ற 20 வயதுடைய இளைஞர் ஒருவர் கடல் நீரோட்டத்தில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கு கடமையில் இருந்த பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரின் துரித நடவடிக்கையால் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்டவர் ஆடியம்பலம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.































