இன்று கனமழை எச்சரிக்கை பல பகுதிகளில் 75 மி.மீ.க்கு மேல் மழை வாய்ப்பு.இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த பகுதிகளில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கு மேல் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஏற்படக்கூடும்.
அதேவேளை மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்கள், திருகோணமலை மாவட்டம் ஆகிய பகுதிகளில் மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் வாய்ப்பும் உள்ளது.இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை ஆய்வு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.









Leave a Reply