பிரான்சில் கனமழை மற்றும் வெள்ள அபாயம்.

பிரான்சில் கனமழை தொடர்ந்து பெய்து வருவது மற்றும் இடியுடன் கூடிய புயல் காரணமாக பல பகுதிகளில் வெள்ள அபாயம் அதிகரித்துள்ளது. வானிலை ஆய்வு மையமான Météo-France அறிவிப்பின் படி நாடு முழுவதும் சுமார் 30 மாவட்டங்கள் மஞ்சள் எச்சரிக்கை (vigilance jaune) நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த எச்சரிக்கை அந்த பகுதிகளில் திடீர் கனமழை தாழ்வான இடங்களில் நீர் தேக்கம் மற்றும் சிறிய அளவிலான வெள்ளம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கிறது.

குறிப்பாக சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரிகள் பொதுமக்களை கவனமாக இருக்கவும் ஆறுகள் மற்றும் வெள்ளம் ஏற்படும் பகுதிகளை தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.

மழை தொடரும் நிலையில் நிலைமை மோசமடைய வாய்ப்பு இருப்பதால், அவசர சேவைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதேபோல் சமீப நாட்களாக பிரான்சில் வானிலை மிகவும் மாற்றமடைந்து வருவதால் பல இடங்களில் தொடர்ச்சியான மழை மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading